கருணாநிதி கவலைக்கிடம் ..!அண்ணா அறிவாலயமாக மாறிய காவேரி மருத்துவமனை..!ஸ்டாலின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை ..!

Published by
Venu

காவேரி மருத்துவமனை வளாகத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று  காவேரி மருத்துவமனை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.
நேற்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்தது.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இன்று இதேபோல்  கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணமாக இருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருக்கின்றனர்.
நேற்று மாலை முதல் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவல்துறையினர் சென்னை மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள், எழும்பூரில் தயார் நிலையில் உள்ளனர்.தற்போது வரை கவலைக்கிடமான நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை உள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில்  காவேரி மருத்துவமனை வளாகத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

14 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

26 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

38 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

44 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

59 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago