கருணாநிதி கவலைக்கிடம் ..!அண்ணா அறிவாலயமாக மாறிய காவேரி மருத்துவமனை..!ஸ்டாலின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை ..!
காவேரி மருத்துவமனை வளாகத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று காவேரி மருத்துவமனை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.
நேற்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்தது.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று இதேபோல் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணமாக இருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருக்கின்றனர்.
நேற்று மாலை முதல் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவல்துறையினர் சென்னை மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள், எழும்பூரில் தயார் நிலையில் உள்ளனர்.தற்போது வரை கவலைக்கிடமான நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை உள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை வளாகத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.