கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் ..!வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம் ..!
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் உடல் நிலை சரி இல்லாமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் தான் இறுதியாக அறிக்கை வெளியானது.இதனால் காவேரி மருத்துவமனை நேற்று மதியம் வரை பரபரப்பு இல்லாமல் இருந்தது.திடீரென்று நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது .அதில் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.இதனால் காவேரி மருத்துவமனைக்கு அனைவரும் நேற்று படையெடுக்க ஆரம்பித்தனர்.தற்போது வரை அணித்து தரப்பினரும் குவிந்த வண்ணமே உள்ளனர்.
ஆனால் திமுகவின் தலைமை இடமான அண்ணா அறிவாலயம் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இன்று வரை அவரது உடல் நிலை சரி இல்லாததால் அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது .கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.