அனுபவசாலியான மு.க.ஸ்டாலினை தான் திமுக தலைவர் கருணாநிதி விட்டுச் சென்றுள்ளார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதேபோல் மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார். மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர். அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனால் கட்சியில் ஏற்படும் சலசலப்பு குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,நாடு அழிந்து கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற திமுக இருக்க வேண்டும், ஸ்டாலின் இருக்க வேண்டும்.மேலும் அனுபவசாலியான மு.க.ஸ்டாலினை தான் திமுக தலைவர் கருணாநிதி விட்டுச் சென்றுள்ளார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…