கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை? நடிகர் ரஜினிகாந்த் கேள்வி
அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி உருவ படத்திற்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள். காமராஜர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில் ,திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை.கருணாநிதியால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர் ஆவார்கள். அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி.கருணாநிதி இறுதிச்சடங்கில் எடப்பாடி பழனிசாமி கலந்து கலந்து கொண்டிருக்க வேண்டாமா?மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU