கருணாநிதியை சந்திக்க யாருமே வர வேண்டாம் ..!விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வேலை ..!ஸ்டாலின் எச்சரிக்கை

Default Image

மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணாநிதியை சந்திக்க வருவதை கட்சியினர், மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று கருணாநிதி உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , கருணாநிதியை 24 மணி நேரமும் அவரது வீட்டிலேயே மருத்துவ குழுக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் எனவும் , கருணாநிதியை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என காவிரி மருத்துவமனை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.இதனால் உடல் நலிவுற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,சரத்குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

இதேபோல் கருணாநிதியை அவரது இல்லத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடமும்,பிரதமர் நரேந்திர மோடியும்,குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஸ்டாலினுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள் .மேலும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் வந்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.அனைவரின் அக்கறையும் வாழ்த்துகளும் அவரை விரைவில் குணமடைய செய்யும்.கருணாநிதி விரைவில் நலம்பெற்று தனது குரலில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் .மேலும் கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் மருத்துவ உதவி வழங்க முன்வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மட்டும் இல்லாமல் இன்றும் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தொண்டர்கள் கலைஞரை காண குவிந்த வண்ணம் உள்ளனர்.ஆனால் திமுக தலைமை நேற்று முதலே தொண்டர்கள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.அதிக அளவில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனால் நேரம் ஆக ஆக வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் அவர்கள் கலைஞரின் பெயரை சொல்லி அழுதும் வருகின்றனர்.இதனால் கோபாலபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்,அதில்  மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கருணாநிதியை சந்திக்க வருவதை கட்சியினர், மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொடர் சிகிச்சையால் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்அவர் கூறுகையில்,  விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.திமுக தலைவர் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள் நன்கு கவனித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்