கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி …!திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் வருகை …!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சென்றுள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார்.
DINASUVADU