நாளை மறுநாள் நடைபெறும் பேரணியால் மு.க.அழகிரி பெரும் குழப்பத்தில் உள்ளார்.
திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றார்.
ஆனால் முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் என்றும் அவருடைய ஆதரவாளர்களை வைத்து தீட்டிமிட்டு வந்தார்.
ஆனால் முக.ஸ்டாலின் திமுக தலைவரானதும் ஒட்டு மொத்த திமுக தொண்டர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.நம்முடைய பலம் வெகுவாக குறைந்துள்ளது என்பதை உணர்ந்த முக.அழகிரி பின்னர் என்னையும் திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினார்.
மேலும் கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பலர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறினார் .
மீண்டும் மதுரையில் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி மீண்டும் கருத்து ஒன்றை கூறினார் .அவர் கூறுகையில்,நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் .மேலும்
சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர்க்கு மேல் வருவார்கள் என்றும் உறுதியுடன் கூறினார்.
பின்னர் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி குறித்து மு.க.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் பேரணிக்கு இன்னும் சரியாக இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.இந்நிலையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதில் ஒரு முன்னேற்றமும் இருந்தது இல்லை.காரணம் அவர் பல நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் ஆலோசனை கூட்டம்தான்.கூட்டம் என்னவோ இன்றும் நடைபெற்று கொண்டுதான் வருகிறது.என்ன நடந்தாலும் அவரது கூட்டத்தில் விரல் விட்டும் எண்ணும் அளவிற்கே தொண்டர்கள் உள்ளனர்.இதனால் அழகிரியே குழப்பத்தில் உள்ளார்.குறிப்பாக தொண்டர்களின் எண்ணிக்கை.ஆனால் அவர் பேரணிக்கு ௧ லட்சம் தொண்டர்களுக்கு மேல் வருவார்கள் என்று கூறியது மட்டும் அல்லாமல் நான் கருணாநிதியின் பையன் சொன்னதை செய்து காட்டுவன் என்று சவாலாகவும் கூறினார்.ஆனால் தற்போது அவரது நிலை மிகவும் பரிதாபமாக உள்ளதாகவே தெரிகிறது.சரியான திட்டம் இல்லை,தொண்டர்களின் எண்ணிக்கை படுமோசம்,யாரை அனுப்புவது என்று பல குழப்பத்தில் உள்ளார்.இந்நிலையில் அழகிரி கருணாநிதியின் பையன் சொன்னதை செய்வேன் என்று கூறிய வார்த்தை நிறைவேறுகிறதா ?இல்லையா ?என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…