திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் .
இன்று 10ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின்,கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் எ.மேலும் தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். திடீரென்று அனைவரும் வருவதால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவ மனைக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளார்.அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…