கருணாநிதியின் ஆசைக்காக தன்மானம் பார்க்காமல் அதிமுகவிடம் சென்று பேசினார் …!கனிமொழி
நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கனிமொழி பேசினார்
நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து கனிமொழி பேசினார்.அவர் பேசியதாவது,திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. நடைமுறைக்கான அறிவிப்பே தவிர, ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்.அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒரே ஆசை.அவருக்காக தன்மானம் பார்க்காமல் முதலமைச்சரிடம் மெரினாவில் இடம்கேட்டார் மு.க.ஸ்டாலின் என்று பேசினார்.
DINASUVADU