கமான்டோ பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம்….
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். மேலும் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.இதனால் வாக்கு எண்ணும் மையமானது கமான்டோ பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த சூழ்நிலையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.