கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு !அரசியல் கட்சி குறித்த தேதி அறிவிப்பு ….
கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார் .
அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை வெளியிட உள்ளதாக அறிவித்தார். இதை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், தமிழகம் முழுவதும் உள்ள தனது நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவர், பிப்ரவரி 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மக்களைச் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ள பிப்ரவரி 21ஆம் தேதி மாலையில் ராமேஸ்வரத்திலேயே பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரத்தில் உள்ள கமல்ஹாசனின் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணம் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.