கமல்ஹாசன் அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க நினைக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் பார்த்தது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது.காவிரி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது – நீரைத் திறக்கிற அதிகாரம் ஆணையத்திடம்தான் உள்ளது.இந்த அடிப்படைகூட தெரியாமல் சினிமா போல நினைத்து கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் எப்படி தண்ணீர் கிடைக்கும்?என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது கொள்கை முடிவுதான்.ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான் .சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் அதை திறக்க முடியாது.அரசு கொள்கை முடிவு எடுத்துத்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளது.தமிழக அரசை கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம்நீட் தேர்வைப் பொறுத்தவரை அது தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு.நீட் தேர்வுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் கல்வித்துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.நீட் தொடர்பான தற்கொலை நிகழ்வுகள் கவலைக்குரிய விஷயம்.வாழ்க்கை என்பதே போராட்டம் – போராடித்தான் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…