கமலஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம் டெல்லி வரை சென்றுள்ளது -ஜெயக்குமார்
கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்து. இதில் பாஜகவெற்றி பெற்றது அதிமுக உட்பட பிரதான கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வாக்களித்தது .இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது ,இதில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார் அதன் பின் பிரதமர் மோடி இருக்கும் இடத்திற்கு சென்று கட்டிப்பிடித்தார் இது பல்வேறு விமர்சனங்களை வைத்தது .
இதனிடையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கமலஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் டெல்லி வரை சென்றுள்ளது இதுதான் அவர் செய்த சாதனை என்று கிண்டலாக பேசிவிட்டு சென்றார் .