கபினி அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!மேட்டூரில் இருந்து அதிகமாக தண்ணீர் திறப்பு..!
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.வெள்ள அபாயத்தை தடுக்க கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லிலும் நீர்வரத்தின் அளவு சரிந்துள்ளது. நேற்று இரவு 9மணி நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 15ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 70ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.
அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வினாடிக்கு 36 ஆயிரத்து 453 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் மாலையில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் கபினி அணை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகம்.