கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு நன்றி!கமல்ஹாசன்
அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநில நட்பால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியது:
கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டியளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,கர்நாடகா-தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது. கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். நாம் சகோதரர்கள். எனவே இரு மாநில விவசாயிகளின் நலனும் முக்கியம். அதனால் நீரை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.