கபினி அணையிலிருந்து குறைந்த அளவு நீர் மட்டுமே திறப்பு..!
கர்நாடகாவிலிருந்து, காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பிய நிலையில், கபினி அணை, தனது முழுக்கொள்ளவை எட்டுவதற்கு சில அடிகளே இருந்தது. இதனால், கபினி அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து, வினாடிக்கு, முதலில் 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
பின்னர், மழையில் அளவு குறைந்ததால், பின்னர், 25 ஆயிரம் கன அடியாகவும், அதனைத் தொடர்ந்து, 15 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கபினி அணையிலிருந்து, வினாடிக்கு, வெறும் 500 கனஅடியே தண்ணீர் திறக்கப்படுவதாக அங்குள்ள பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவும் ஓரிரு நாட்களில் முற்றிலும் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது