கன்னியாகுமரி குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம் அதிகாரிகள் கண் கலங்கினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் C.S.I மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்திலிருந்து தீக்காயங்களுடன் சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார் நேற்று அங்குள்ள குழந்தைகளுக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்துவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் அதிரடியாக காப்பகத்தில் அதிகாரிகள் நுழைந்தனர்.இவர்கள் வருவதை பார்த்துக்கொண்டு அங்கு வேலைசெய்பவர்கள் இவர்கள் வருவதை தெரிந்து கொண்டு குழந்தைகளை ஒரு அறையில் வைத்து அடைத்தனர் .
குலந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அவர்களை கண்டுபிடித்த அதிகாரிகள் அங்கு 17 வயது சிறுமியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அந்த சிறுமியின் உடல்முழுவதும் தீக்காயங்கள் ,பிரம்பால் அடித்த தடம் போன்றவை இருந்தது யாரும் தன்னை நெருங்கினாள் கண்டு அஞ்சி நடுங்கும் நிலையில் அந்த சிறுமி இருந்தாள் .
குழந்தைகள் நல அலுவலர்கள் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரோஜா என்ற சமையல் வேலை செய்யும் பெண் இந்த குழந்தைகளை இப்படி சித்தரவதை செய்வதாக தெரிவித்தனர்.சரோஜாவிடம் விசாரித்த பொழுது அவர் இதை ஒப்புக்கொண்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த காப்பகம் இத்தனைக்கும் அரசு வழங்கும் நிதிமூலம் இயங்கி வருகிறது, ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களிடமே குழந்தைகளுக்கு தேவையான அனைத்திற்கும் வசூல் நடைபெறுகிறது .அரசு கண்காணிப்பில் உள்ள இதுபோன்ற காப்பகங்கள் தொடர்ந்து கண்ணகாணிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை .