கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கத்திரி வெயிலுக்கு இடையே பரவலாக மழை!
கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்,கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில் பரவலாக மழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், திங்கள்சந்தை, இரணியல், குலசேகரம்,என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது.
இதேபோல தேனி மாவட்டம் போடியில் நேற்று இரவு கனமழை பெய்தது. பெரியகுளத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மா மரங்களில் உள்ள மாங்காய்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டியுடன் கன மழை பெய்தது. ஓசூரில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்ததால் அருகில் இருந்த மின் கம்பங்கள் முறிந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.