கன்னியாகுமரி அருகே கூலித் தொழிலாளி கொடூர கொலை!

Default Image

கூலித் தொழிலாளி கொடூரமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையம் அருகே  கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்டான்லி ஜோன்ஸ், குழித்துறை மேற்கு ரயில்நிலையம் அருகே உள்ள தோட்டத்தில், கழுத்து அறுக்கப்பட்டும், மார்பில் ஆழமாக குத்தப்பட்டும் சடலமாகக் கிடந்துள்ளார். உடலைச் சுற்றி மதுக்குப்பிகள் கிடந்ததால், கொலை செய்யப்படும் முன்னர் ஸ்டான்லி ஜோன்ஸ் சிலருடன் சேர்ந்து மது அருந்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஸ்டான்லி ஜோன்சுக்கு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் விவாகரத்தாகி இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஸ்டான்லி ஜோன்ஸ் கொல்லப்பட்டதற்கு பெண்கள் தொடர்பு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் கூடாரமிட்டு தங்கி இருந்த சில இளைஞர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்