கன்னியாகுமரியில் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
அரசுப் பள்ளியில் சிறுமிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குளச்சலை அடுத்த இலப்பவிளையில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் வகுப்பாசிரியரான பொன்ராஜதுரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறியதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற போலீஸார் ஆசிரியர் பொன்ராஜதுரையை காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற போது, பொதுமக்கள் அவரை தாக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியர் பொன்ராஜதுரை மீது சிறுமிகள் மீதான வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.