கன்னியாகுமரியில் விவசாயிகள் அணையை தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள கோரிக்கை!
விவசாயிகள், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளோடு சேர்த்து அணையை தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களிலுள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பல ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படாமல் கிடப்பதால், பத்து அடிக்கு மேல் சகதி, மணல், மழை வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட மரங்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. இதனால் அணையில் போதிய நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அணையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அணையை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.