கன்னியாகுமரியில் தடையை மீறி பன்னாட்டு முனைய துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!

Default Image

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடையே பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோரும் கூடியிருந்த மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட நாகர்கோவிலில் நடந்த 2 மறியல் போராட்டங்களிலும் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்