கன்னியாகுமரியில் குலசேகரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு!

Default Image

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, இடைக்கட்டான் கரையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுஜித் (வயது20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால் தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார்.
குலசேகரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
மங்கலம் பகுதியில் சென்ற போது, எதிரே குலசேகரத்தில் இருந்து பொன்மனை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள் இரண்டு துண்டாக உடைந்து, அதில் பயணம் செய்த சுஜித் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுஜித்தின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் களியல் பகுதியை சேர்ந்த மோகன்தாசை (40) பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சுஜித் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுஜித்தின் உடலை பார்த்து கதறி அழுதது, அங்கு நின்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்