கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, நகராட்சி சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வறட்டுப்பாறை பகுதி கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சோலையார் அணைக்கு செல்லும், பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், சிரமத்திற்கு ஆளாகினர். 3 நாட்களாக அப்பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும், தொடர்மழை காரணமாக, சோலையார் அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஒருசில தினங்களில், அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தியதின்பேரில், வால்பாறை வட்டாட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…