கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, நகராட்சி சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வறட்டுப்பாறை பகுதி கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சோலையார் அணைக்கு செல்லும், பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், சிரமத்திற்கு ஆளாகினர். 3 நாட்களாக அப்பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும், தொடர்மழை காரணமாக, சோலையார் அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஒருசில தினங்களில், அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தியதின்பேரில், வால்பாறை வட்டாட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…