கண் பார்வை குறைபாடு உடைய மாணவருக்கு மடிக்கணினி வழங்கினார் முதலமைச்சர்…!!
கண் பார்வை குறைபாடு உடைய மாணவர் ஒருவருக்கு புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பார்வை குறைபாடு உடைய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலான புதிய தொழில்நுட்ப வசதி கொண்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சபரி வெங்கட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Screen reading format வசதி கொண்ட மடிக்கணினியை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை மாணவர் மற்றும் அவரது பெற்றோர் சந்தித்தனர்.
DINASUVADU.COM