கண்டிப்பா திமுக ஆதரவு எங்களுக்கு தேவை …!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிரடி கருத்து

Published by
Venu

அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருணாநிதிக்கு திமுக ஒத்துழைப்பு அளித்தால் சில நடைமுறைகளை அரசு செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.

திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தேசியத்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு ரஜினி, கமல், வைகோ, திருமாவளவன் அழைக்கப்படவில்லை.இதே போன்று திமுக அதிமுக இடையே ஜெயலலிதா மறைவுக்கு பின் சமீபகாலமாக நிலவி வந்த பண்பாடு காரணமாக கருணாநிதியை பலமுறை அதிமுக தலைவர்கள் சென்று பார்த்தனர். ஆனால் நினைவேந்தல் கூட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பில்லை.
அழைத்தால் பரிசீலிப்போம் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் அழைக்கவே இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் இது ஒரு புறம் இருக்க அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருணாநிதிக்கு திமுக ஒத்துழைப்பு அளித்தால் சில நடைமுறைகளை அரசு செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும். கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

1 hour ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago