கணினிகளை கண்காணிக்க மத்தியஅரசு முடிவு செய்தது அடிப்படை உரிமையை மீறுவதாகும்…! திமுக தலைவர் ஸ்டாலின்
கணினிகளை கண்காணிக்க மத்தியஅரசு முடிவு செய்தது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், நாட்டில் அனைத்து கணினிகளையும் கண்காணிக்க மத்தியஅரசு முடிவு செய்தது அடிப்படை உரிமையை மீறுவதாகும் .மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது, முடிவை மத்தியஅரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
கீழ் நீதிமன்றங்களில் நீதிபதி தேர்வுக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் நிதி ஆயோக் பரிந்துரைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.