கணவன் திருமணமாகிய சில வாரங்களிலேயே வேறொரு பெண்ணுடன் மாயம்!மனைவி தீக்குளித்து தற்கொலை

Default Image

திருமணமாகி சில வாரங்களிலேயே,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேறொரு பெண்ணுடன் கணவர் மாயமாகிவிட்டதால், மனமுடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தங்கராஜ் வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ரங்காபுரத்தில் வசிக்கும் அத்தை மகளான அர்ச்சனாதேவியை, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.

 

அர்ச்சனாதேவியை நிச்சயம் செய்ததில் இருந்து அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்து சென்ற தங்கராஜ், தமது ஊரிலேயே கோமதி என்ற பெண்ணையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த பின்னரும் தங்கராஜ், கோமதியுடனான காதலை தொடர்ந்ததால், கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

 

இதையடுத்து, ஒரு மாதத்துக்கு முன்பு அத்தை வீட்டுக்கு சென்ற தங்கராஜ், அங்கு தமது மனைவி அர்ச்சனாதேவியை விட்டுவிட்டு, தமது பழைய காதலி கோமதியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

 

இதையடுத்து, தமது கணவரை மீட்டுத் தரக்கோரி, காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அர்ச்சனாதேவி, வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அவரது அலறம் சத்தம் கேட்டு, உறவினர்கள் மீட்க முயற்சித்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

 

சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றிய ஆர்.கே.பேட்டை போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் நிலையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, திருத்தணி கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்