கட்டிடம் கட்ட 10 சதவிகிதம் நிதி….வங்கி செயலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு..!!
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டுவதற்காக திரட்டப்பட்ட நிதியை கையாடல் செய்த வங்கி செயலருக்கு எதிராக, விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் கட்டுவதற்காக, வேளாண் கடன், நகை கடன், தனிநபர் கடன் பெறும் நபர்களிடம் கடன் தொகையில் இருந்து 10 சதவீதத்தை கட்டிட நிதியாக வங்கியின் செயலாளர் வசூலித்துள்ளார்.
அவர்களுக்கு எந்தவொரு ரசீதும் வழங்காமல், ஒரு கோடி ரூபாய்க்குமேல் வங்கி செயலாளர் நிதி திரட்டியுள்ளார். இந்த நிதியை, சொந்த விஷயத்துக்கு பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக, கொடுமுடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
dinasuvadu.com