சென்னை:கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratis for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகைபெறலாம் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து,கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முன்களப் பணியாளர்கள் ஜி. கணேசன் மற்றும் எம். பாலாஜி ஆகியோரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா 25 இலட்சம் ருபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
மேலும்,அதன்பின்னர்,மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 1037 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு திருக்கோயிலில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தை மாற்றுத்திறனாளி மணமகன் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் மணமகள் எஸ். மோனிஷா ஆகியோருக்கு திருக்கோயிலில் திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவினையும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி, வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…