திமுகவில் இருந்து 2000 ஆம் ஆண்டு அதிமுகவில் அக்கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.பின்னர் சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட அவர் அதில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வரை முன்னேறினார்.
பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் அக்கட்சியின் தலைமைக்கு வரவே இரவோடு இரவாக அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.பின்னர் 2016ல் அரவகுறிச்சி இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டிடிவி தினகரனின் அணியில் இணைந்த இவர் மட்டுமல்லாமல் 18 பேரை கொறடா பரிந்துரையின் பெயரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து பின்பு தீர்ப்பு வெளியாகி அதில் சபாநாயகரின் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.இந்நிலையில் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யபோவதில்லை என்று பல தகவல்கள் கசிந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி தனது ஆதார்வார்களுடன் திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி அதிமுகவில் சேர முயற்சித்த செந்தில்பாலாஜி சேரமுடியாமல் போனதால் திமுகவில் இணைந்துள்ளார். ஆனால் அவர் அங்கு வெறும் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் என்று கூறினார்.மேலும் கூறிய அவர் செந்தில்பாலாஜி பல கட்சிகளுக்குத் தாவுகின்ற பச்சோந்தி , பல வேஷங்களை போடும் வேடதாரி என்றும் விமர்சித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…