கடையை மூடு என்று சொன்னவரிடம் அரிவாளை தூக்கி மிரட்டிய உரிமையாளர்..!!
கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடையின் உரிமையாளர்…
கோவில்பட்டி ,
இன்று இந்திய முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து பாரத் பந்த் தை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.இதில் தமிழகத்தில் அதிமுக , பிஜேபி தவிர அனைத்து கட்சிகள் , தொழிற்சங்கம் , வணிகர் சங்கம் என பெரும் பகுதி அதரவு அளித்தனர்.அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினர் திறந்து இருக்கும் கடைக்காரரிடம் சொல்லினர்.அப்போது ஒரு கடையில் கடையை மூட சொன்ன போது அந்தக் கடையின் உரிமையாளர் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கடைசியில் கடை உரிமையாளர் கடையை மூட சொல்லி வந்த காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.இதனைத் தொடர்ந்து கடைக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். .இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
DINASUVADU