கடும் நிதி நெருக்கடியால் கட்டணஉயர்வு அமல்!
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2011ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடும் நிதி நெருக்கடியால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
கட்டண உயர்வுக்கு பிறகும் ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்…
இன்று முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்:
புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு
மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு
புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 ஆக உயர்வு!
வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆக உயர்வு!
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது!
குளிர்சாதனப்பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டது
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்!
சென்னையில் மாநகரப்பேருந்துகளுக்கு இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 அல்ல, ரூ.5
சென்னை மாநகரப் பேருந்தில் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஏன், என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வருடாந்திர ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்வுக்காக, பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், எரிபொருட்கள் விலை உயர்வும் கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 43.10 காசுகளுக்கு விற்கப்பட்ட 1 லிட்டர் டீசல் விலை தற்போது ரூ. 65.83 காசுகளாக இருப்பதால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் இயக்கத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்குவதற்காகவும், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளை பராமரிக்க கூடுதல் தொகையை செலவிடுவதற்காகவும் கட்டண உயர்வுக்கு வேறு வழியின்றி தள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு விடுத்துள்ள செய்தித்தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
#BusFareHike