கடுமையான விலைகுறைவு..!! என்ன தெரியுமா..?
போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது…
தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் எப்பவும் டாப் தான்.ஆனால் தற்போது விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடியை இந்தாண்டு குறைத்திருந்தனர்.
ஆனால் இந்தாண்டு குறுகிய காலத்தில் பலன் தரும் சின்ன வெங்காய சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் வெங்காய சாகுபடி செய்தால் குறைந்தது இரண்டு மாதத்தில் விளைச்சல் கொடுத்து விடும். இந்நிலையில் தற்பொது பெய்து வரும் மழையின் காரணமாக விளைச்சல் அதிகரித்து விலை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே 1 கிலோ வெங்காயம் 10ரூபாய் முதல் 15ரூபாய் வரைவிலை போகின்றதால் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர்.
DINASUVADU