சென்னை வானிலை ஆய்வு மையம் ,தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதாலும், அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 6மணிக்குத் தொடங்கி அடுத்த 24மணி நேரத்துக்குக் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்றுவீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும், கடலில் மூன்றரை முதல் 4.3மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 45நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலையிலேயே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…