காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தனது தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்கச் சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.
கழுத்தில் காயமடைந்த இளம் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில்,கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனும் அவரும் காதலித்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதும் தெரியவந்தது.
நேற்று விருத்தாசலத்தில் காதலியை சந்தித்துப் பேசப் பிரபாகரன் முயன்றபோது அந்த பெண் மறுத்துவிட்டதும், இந்நிலையில் தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்க இன்று இளம் பெண் கல்லூரிக்குச் சென்றபோது அவரை வழிமறித்துப் பிரபாகரன் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…