கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை வழங்கியுள்ளது வானிலை மையம்.