கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.211 கோடிக்கு மது விற்பனை….!!
தமிழகத்தில் கடந்த 2017 ஆண்டின் கடைசி நாளான டிசம்பர்.31 மற்றும் புத்தாண்டு முதல் தினமான ஜனவரி.1 ஆகிய இரு தினங்கள் மட்டுமே சுமார் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இதனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.