கஜா புயல் பாதிப்பு…நாகை, திருவாரூரை பார்வையிடுகிறார் தமிழக முதல்வர்…!!
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக, நாளை ரயில் மூலம் நாகை செல்லும் அவர், நாளை மறுதினம் ஆய்வுகளை மேற்கொள்கிறார். கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், முழு வீச்சில் சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, கடந்த செவ்வாய் கிழமை, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com