கஜா புயல் நிவாரணப் பணிக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதியுதவி…!!!
கஜா தமிழகத்தை புரட்டி போட்ட புயலாகும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்வி குறியாக வைத்த புயல் என்றே சொல்லலாம்.கஜா புயலால் இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.4 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மேலும் இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் என ஒட்டு மொத்தமாக பெருத்த சேதம் ஏற்பட்டது.
சுமார் 88,000 ஹெக்டார் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு என ஒட்டு மொத்த மக்களின் விவசாயமே பலத்த சேதமடைந்தது.மேலும் 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. ஒட்டு மொத்தமாக இதுவரை கஜா தன் சூறைக்காற்றால் புடுங்கி போட்ட மின்கம்பங்கள் மட்டும் 1,13,533 மின் சேதமடைந்துள்ளன.மேலும் 1,082 மின் வினியோக மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது.
மேலும் மக்கள் வீடுகளை இழந்தவர்கள் என அனைத்து மக்களும் 2,49,083 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.ஆனாலும் மக்கள் இன்னும் உணவு என அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.பலரும் உதவி கரம் நீட்டிய வரும் நிலையில் இந்த கஜா புயல் நிவாரணப் பணிக்கு கேரள அரசும் தனது பங்கிற்கு ரூ.10 கோடி நிதி வழங்கி கேரள அரசு அறிவித்துள்ளது.