கஜா புயல் தாக்கம்…போர்க்கால நடவடிக்கை…தமிழக முதல்வர்….!!
கஜா புயல் தற்போது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று இரவு 12.30 மணிக்கு கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்து தற்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளது.
இந்நிலையில் கஜா புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை ,தஞ்சை மற்றும் திருவாரூரில் 12,000 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகளை முடக்கி விட்டுள்ளதாகவும் ,மின்சாரத்துறை , பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறையை போர்க்கள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
dinasuvadu.com