கஜா புயல் சேத விவரங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழுவினரின் பயண விவரங்கள்…!!
கஜா புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய செல்ல உள்ள மத்தியக் குழுவினரின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த வழித்தடத்தில் எப்போது அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பது குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம்..
மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் இன்றுமுதல் தங்களது ஆய்வை துவங்க உள்ளனர். முதல்கட்டமாக இன்றுமாலை 5 மணிக்கு புதுக்கோட்டையிலும், இரவு 8.30 மணிக்கு தஞ்சையிலும் சேத விவரங்களை பார்வையிடுகின்றனர்.
25-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணிக்கும் மீண்டும் தஞ்சையில் தங்கள் ஆய்வை தொடர்கின்றனர். அன்றுமாலை 3 மணிக்கு திருவாரூரில் புயல் சேதங்களை பார்வையிட உள்ளனர். 26-ந்தேதி திங்களன்று காலை 7.30 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யத்தில் சேத விவரங்களை அளவிட உள்ளனர்.அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு சென்று கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டு தங்கள் ஆய்வை நிறைவு செய்ய உள்ளனர்.
dinasuvadu.com