கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

Published by
Dinasuvadu desk
கஜா புயல் காரணமாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது  அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது.
சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது.  நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது .
நாளை மறுநாள் முற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிற்பகல் கரையை கடக்கும் என்றும், 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி பின்னர் வலுகுறைந்து புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்  என  வானிலை மையம்  அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என  தமிழக தலைமை செயலருக்கு, மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது.
கஜா புயல் காரணமாக தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் ஒன்று எழுதி உள்ளது. அதில்  தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும்.”அணைகளின் நீர்வரத்து, வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

12 minutes ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

18 minutes ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

49 minutes ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

58 minutes ago

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

2 hours ago