கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!
கஜா புயல் காரணமாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது.
சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது .
நாளை மறுநாள் முற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிற்பகல் கரையை கடக்கும் என்றும், 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி பின்னர் வலுகுறைந்து புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக தலைமை செயலருக்கு, மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது.
கஜா புயல் காரணமாக தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் ஒன்று எழுதி உள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும்.”அணைகளின் நீர்வரத்து, வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.
dinasuvadu.com