கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலில் சிக்கி டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் பால், வேட்டி, சேலை, போர்வை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
புயல் மற்றும் மழை தாக்கியதில் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு 4 ஆயிரத்து 100 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதை முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெய்து வரும் பருவமழையில் இருந்து வீடுகளை பாதுகாப்பதற்காக கூரை மேல் போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கை வந்ததாக கூறியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்து கொள்வதற்கு தார்ப்பாய் ஷீட்டுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக வாங்கி உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…