கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசால் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.
மேலும் மக்கள் மின்சாரமின்றி அன்றாட தேவைகளின்றி தவித்து வருகின்றனர்.இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் கஜா புயல் குறித்த அலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.மேலும் முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000 வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 யும், பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100; முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்கு ரூ.85000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் 175 மரங்கள் உள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1.92 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மறு சாகுபடிக்கு செய்தவர்களுக்கு ரூ.72000 வழங்கப்படும் என்றும் தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ2.64 லட்சமும், சொட்டு நீர் பாசன சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்” வழங்கப்படும் என்றும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் நிவாரண உதவி, சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ1000 கோடி உடனடியாக விடுவிக்க உத்தரவுவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை மின்சார வாரியம் விரைந்து முடிக்க முதற்கட்டமாக ரூ.200 கோடி வழங்கவும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் எளிதில் கிடைத்திட ஆவின், கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்த அவர் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டியும், சேலையும் வழங்கப்படும். மேலும் கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும் மற்றும் பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.கஜா புயலால் முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படும். சேதமடைந்த பயிர்களை வெட்டி அகற்றிட மரத்திற்கு ரூ.500, வழங்கப்படும் என்றும் மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊராட்சித்துறைக்கு ரூ.25கோடியும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25கோடியும், பொதுப்பணித்துறைக்கு ரூ.10கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.2கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு ரூ.5கோடியும், நகராட்சிக்கு ரூ.5கோடியும், பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு ரூ.5கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்கிவிடவும்,இந்த நிதி தமிழக அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…