கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்பதாக குற்றசாட்டு…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார். மக்களிடம் பேசிய அவர், வீடு கட்டி தருவதற்கு ரூ.50 ஆயிரம் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அரசு உரிய முறையில் உதவிகள் மக்களை சென்றடைய உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.