கஜா நடவடிக்கை…..மீனவர்கள் புயலில் சிக்கவில்லை…..வரலாற்றில் ஒரு மைல்கல்…! அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்..!!
கஜா புயல் தடுப்பு நடவடிக்கை வரலாற்றில் இது ஒரு மைல்கல் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கஜா புயல் பாதிப்புகளைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாகையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. புயல் வருவதற்கு முன்பே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் என 81,948 பேர் முன்னெச்சரிக்கையாக 471 முகாம்களில் தங்க வைத்ததால் உயிரிழப்பு குறைந்துவிட்டது.
கஜா புயல் நடவடிக்கை குறித்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒகி புயல் அனுபவத்தை கொண்டு, கஜா புயலுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டது முன்னெச்செரிக்கை போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு மீனவர் கூட புயலில் சிக்கவில்லை, வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.கஜா புயலில் விரைந்து செயல்பட்டதற்காக தமிழக அரசை பாராட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் அளிக்கப்படும். சேதத்தை கணக்கிட அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
DINASUVADU